9 ஜூலை, 2016

விமல் வீரவன்ச ராவனா பலய அமைப்பிற்கு 7 வாகனங்களை வழங்கியுள்ளார்

ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச ராவனா பலய அமைப்பிற்கு 7 வாகனங்களை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.
இலங்கை பொறியியலாளர் திணைக்களத்தின் பயன்பாட்டுக்கான வாகனங்கள் ஏழு இவ்வாறு ராவனா பலயவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
ராவனா பலய அமைப்பின் அழைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இவ்வாறு வாகனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார். இந்த விடயம் குறித்து குறித்த பௌத்த பிக்குவிடம் எதிர்வரும் 13ம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளது.