புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2016

7 பேரின் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டை அணுகாமல் தமிழக அரசு தானாகவே நீண்ட பரோலில் விடுதலை செய்ய வேண்டும்:பழ.நெடுமாறன்

உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர்,   ‘’தஞ்சையில் வருகிற 15,16,17-ந் தேதிகளில் தனி தமிழ் இயக்கத்தின் 100-வது ஆண்டு விழா மாநாடு, உலக தமிழர் பேரமைப்பின் 9-வது மாநில மாநாடு ஆகியவை நடைபெறுகிறது. இதில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழ் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

தமிழர்களின் 60 ஆண்டு கோரிக்கையான குளச்சல் துறைமுக திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் ஆசியாவிலேயே சிறந்த சரக்கு பெட்டகமாக இருக்கும். இந்த திட்டத்துக்கு குரல் கொடுத்த மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

குளச்சல் துறைமுக திட்டத்தை நிறைவேற்ற கேரள அரசு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. இதை கண்டிக்கிறோம்.

தமிழகத்தில் கொலைகள், கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இதற்கு காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளும், சமூக விரோதிகளும், அரசியல்வாதிகளும் தான் காரணம், இந்த 3 பேரையும் ஒடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றச்செயல்களில் சமூக விரோதிகள் தப்பி விடுகிறார்கள். அப்பாவிகளும், நிரபராதிகளும் சிக்கி கொள்கிறார்கள்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் ஆந்திர அரசை, மத்திய அரசு மூலம் அணுகி தடுக்க வேண்டும். ராஜீவ் கொலையாளிகள் 7 பேரின் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டை அணுகாமல் தமிழக அரசு தானாகவே முன்வந்து நீண்ட பரோலில் விடுதலை செய்ய வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைக்கும் போது, மீனவர்கள் மீன்பிடித்து கொள்ளலாம், வலைகளை காய வைத்து கொள்ளலாம் என்று உடன்படிக்கை உள்ளது. ஆனால் இதை இலங்கை மீறி வருகிறது. இதனால் கச்சத்தீவு உடன்படிக்கையை மத்திய அரசு உடனடியாக திரும்ப வேண்டும்’’என்று கூறினார்.

ad

ad