புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2016

ராம்குமாரை பெற்றோர் சந்திக்கவில்லை

சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருக்கும் ராம்குமார், தன்னை பெற்றோர் வந்து பார்க்காததால் பித்துபிடித்தவன்
போல இருப்பதாக சிறை அதிகாரி கூறியுள்ளார்.
இவர் தற்கொலைக்கு முயற்சி செய்யலாம் என்பதால் 24 மணி நேரமும் இரண்டு சிறை போலீசார் கண்காணித்து வருகின்றனர். ராம்குமார் கழுத்தை அறுத்துக்கொண்டதால் ஏற்பட்ட காயம் ஆறுவதற்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அத்துடன் அவருக்கு ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டு 4 நாட்கள் ஆகியும் பெற்றோர், உறவினர்கள் வந்து பார்க்கவில்லை.
இதனால் அவர் பித்துபிடித்தவன் போல் இருப்பதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ராம்குமாருக்கு மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் உணவே வழங்கப்பட்டு வருகிறது.
வருகிற திங்கட்கிழமை ராம்குமாரின் பெற்றோர் அவரை சிறையில் சந்திப்பார்கள் என சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ad

ad