9 ஜூலை, 2016

மின்சாரசபையில்300 கோடி ஊழல் விசாரணைக்கு துரித உத்தரவு

இலங்கை மின்சார சபை நிதியத்தின் 300 கோடி ரூபா நிதியை, தனியார் நிறுவனமொன்றில் முதலீடு செய்யப்பட்டு காணாமல் போயுள்ளமை தொடர்பில் நடாத்தப்பட்டு வரும் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.