புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2016

விடுதலைப் புலிகள் அமைப்பின் பாலகுமாரன் இறந்ததாக வந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் – ராஜிதசேனாரட்னா

விடுதலைப் புலிகள் அமைப்பின் பாலகுமாரன் இறந்ததாக வந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரட்னா
தெரிவித்தார்.
ஒருநாள் பயணமாக நேற்றைய தினம் யாழிற்கு வருகைதந்த அமைச்சர் சுதேச வைத்தியம் தொடர்பில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில் ,
விடுதலைப் புலிகள் அமைப்பின் பாலகுமாரன் இறந்ததாக வந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
யாழ். குடாநாட்டுற்கு 1988ல் விஜயகுமாரனதுங்காவின் கீழ் செயல்பட்ட காலத்தில் வருகை தந்து பல கருமங்களை ஆற்றினேன்.
1988இல் யாழிற்கு வந்தபோது இந்திய இராணுவமே எம்மை மாவட்டச் செயலகம் வரைக்கும் அழைத்து வந்தது. இதே மாவட்டச் செயலகத்தில் வைத்து அப்போதைய ஈரேஸ் அமைப்பின் தலைவர் பாலகுமாரனை சந்தித்து கலந்துரையாடினேன். எனது தேர்தல் பரப்புரையிலும் அவர் ஈடுபட்டார். அதன்பின்பே அவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்.
இதேபோன்று யுத்த காலத்தில் வடக்கில் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் இல்லத்தில் சந்தித்து உரையாற்றியுள்ளேன். மகேஸ்வரனின் இறுதி தினத்தில் பயணித்ததும் எனது வாகனமே. அந்தக் காலத்தில் தெற்கில் எனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருந்த்து.
இவ்வாறு 30 வருடம் யுத்தத்தில் வாழ்ந்த இப்பகுதி மக்களின் சுகாதாரத்தேவை மிக அதிகம் என்பதனாலேயே அதிக நிதி ஒதுக்குகின்றோம் . இம்முறை மேல் மாகாணத்திற்கு சுகாதார தேவைக்காக ஒதுக்கிய நிதியினைவிட வடக்கு மாகாணத்திற்கு ஒதுக்கிய நிதி அதிகம். இந்த நாட்டில் அதிக நிதி ஒதுக்கப்படும் துறையாக மூன்று துறை உள்ளது. அதன்பிரகாரம் பாதுகாப்பு இ கல்வி இ சுகாதாரம் ஆகிய துறைகளே அவை என்றார்.

ad

ad