புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2016

புங்குடுதீவு உலக மையம் விடுக்கும் அன்பான வேண்டுகோள்

புங்குடுதீவு உலக மையம் - பிரித்தானிய கிளை added 11 new photos.Like Page
20 hrs ·
தாய்மண் உறவுகளுக்கு உலக மையத்தின் பணிவான வணக்கங்களும் அன்பான வேண்டுகோளும்!

என்னவெனில், உலக மையத்தின் இலவச கல்வி வகுப்பில் 167 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். அவர்களுக்கு கல்வியை கற்றுத்தர பதினொரு ஆசிரியர்களும், ஒரு வரவேற்பாளரும், ஒரு காவல் ஊழியர் என மொத்தம் பதின்மூன்று பேர் எம் அமைப்பால் தெரிவு செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்கும் அதேவேளை, சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப சம்பளத்தை மாதா மாதம் செலுத்தி வருகின்றோம். இதுவரை அச்செலவினத்தை உலக மைய ஒருங்கிணைப்பாளர்களும், அதன் செயற்பாட்டாளர்களுமே ஏற்று வந்தனர். இவ்விலவசக் கல்விசேவை விஸ்தரிக்கப்பட்டு, ஊரிலுள்ள சகல மாணவச் செல்வங்களையும் உள்வாங்கி அவர்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு "புங்குடுதீவு உலக மையம்" உங்களை ‪#‎அன்போடும்‬‪#‎உரிமையோடும்‬ கேட்டுக்கொள்கிறது.
எம்மக்களுக்கு எமது செயற்பாடுகளை இலகுவாக தெரிந்து கொள்ளும் வண்ணம் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. பார்த்தபின்பு, உதவும் உள்ளம் கொண்ட நல்லுள்ளங்கள் எமை தொடர்பு கொள்ளவும். சிறுதுளி பெருவெள்ளம்!
ஆசிரியர்கள்:
பா. அசோக் -கணிதம் (9,10,11 ஆம் ஆண்டு )
சம்பளம் - ரூபாய் 15000
வி. பாலகுமார், இ. தேவதாஸ் (புலமைப் பரிட்சைக்கான விசேட ஆசிரியர் )
சம்பளம் - ரூபாய் 7000
J. மேரி பிரியந்தினி -புலமைப் பரிட்சை ஆசிரியை
சம்பளம் -ரூபாய் 5000
Billclinton -தமிழ் (வகுப்பு 6,7,8)
சம்பளம் - ரூபாய் 5000
காந்தி மாஸ்டர் -தமிழ் (வகுப்பு 9,10,11)
தனது வாகன போக்கு வரத்து செலவை மட்டும் ஏற்க சொன்னார். 🙏 நன்றி மாஸ்டர்
போக்கு வரத்து செலவு- ரூபாய் 5000
A. பிரதீபன் -விஞ்ஞானம் (வகுப்பு 6,7,8,9,10,11)
மரியரோஷா -விஞ்ஞானம் (வகுப்பு 6,7,8)
சம்பளம் - ரூபாய் 5000
T. அனிஷா -1,2 வகுப்பு பாடம்
க. கேமலதா -1,2 வகுப்பு பாடம்
(இரு வேறு பிரதேச வகுப்பு)
சம்பளம் - ரூபாய் 5000
பரமேஷ்வரன்- ஆங்கிலம்
சம்பளம் -இலவசம்
🙏 நன்றி பரமேஷ்வரன்
ஜதுர்சனா -வரவேற்பாளர்
சம்பளம் - ரூபாய் 5000
எட்வேட் பெர்னான்டோ - காவல் ஊழியர்
சம்பளம் - ரூபாய் 7000
மின்சாரம் -ரூபாய் 2500
மாணவர்களுக்கான குடி தண்ணீர்- ரூபாய் 2000 என்று மொத்த மாத செலவு ரூபாய் 80,500.
நன்றி
புங்குடுதீவு உலக மையம்
பிரித்தானியா.
LikeShow more reactionsCommentShare

ad

ad