11 ஜூலை, 2016

யுத்தக்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் அவசியம்; சம்பந்தன் மீண்டும் வலியுறுத்தல்

யுத்தக்குற்ற விசாரணை தொடர்பிலான உள்ளக பொறிமுறையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆலோசனைக்கு அமைய ச
ர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றல் அவசியமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
யுத்தக் குற்றவிசாரணைகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியமில்லை என தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்ததாக கொழும்பில் வெளியாகும் சிங்கள பத்திரிகையொன்று இன்று பிரதான செய்தியாக, செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை  தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவியபோது, யுத்தக்குற்ற விசாரணை தொடர்பிலான கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமில்லை என அடித்துக் கூறினார்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஸ்ரீலங்கா அரசின் அணுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமெனவும் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.