புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2016

டற்படையினரின் காணி அளக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

மன்னார் – வங்காலை கிராமத்தின் கடற்கரையை அண்மித்த தனியாருக்கு சொந்தமான காணியை கையகப்படுத்தும் வகையில், கடற்படையினரால் இன்றும் காணி அளவீடு செய்யும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பினால் இந்த முயற்சி கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணியை கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

குறித்த காணிக்கு 22 இலட்சம் ரூபாய் வழங்குவதாகவும், அந்தக் காணியை தமக்கு நிரந்தரமாக வழங்குமாறும் கடற்படையினர் காணி உரிமையாளர்களை வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் காணி உரிமையாளர்களின் அனுமதி இன்றி காணி அளவிடும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டதை அடுத்து மக்களின் எதிர்ப்பால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், இன்றும் கடற்படையினர் பலவந்தமாக காணியை அளவீடு செய்ய முற்பட்டதை அடுத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து மன்னார் அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரிய மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர் பரமதாஸ் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதற்கமைய நானாட்டான் பிரதேச செயலாளர் பரமதாஸ், பொதுமக்களுடன் இணைந்து கடற்படையினரின் அளவிடும் முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளதாக இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும் இம்முறை கடற்படையினரின் காணி அளவிடும் முயற்சியை தன்னால் தடுத்து நிறுத்த முடிந்ததாகக் கூறியுள்ள நானாட்டான் பிரதேச செயலாளர்,

அடுத்த முறை பொலிஸாரை அழைத்து வந்து கடற்படையினர் காணி அளவீடு செய்ய முனைந்தால், தன்னால் அதனை தடுத்து நிறுத்த முடியாது என்றும் கூறிச் சென்றதாக குறித்த மீனவர் தெரிவித்தார்.   

வங்காலை கடற்படையினருக்கு குறித்த ஒரு ஏக்கர் காணியை விற்பனை செய்ய உரிமையாளர்கள் மறுத்தால் பணம் மற்றும் காணி இரண்டையும் இழக்க நேரிடும் என கடற்படை எச்சரித்ததாகவும் காணி உரிமையாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

ad

ad