புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2016

ராம்குமார் தான் குற்றவாளி என கூறிவிட்டு சிறையில் அணிவகுப்பு நடத்துவது ஏன்?: வக்கீல் ராம்ராஜ் கேள்வி

என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள தேன்பொத்தை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார்
(வயது 22) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ராம்குமாரின் சார்பில் முற்போக்கு வழக்கறிஞர் அமைப்பில் உள்ள ராம்ராஜ் என்ற வக்கீல் புதிதாக ஆஜராக முடிவு செய்துள்ளார். நெல்லை மாவட்டம் வாசு தேவநல்லூர் அருகே உள்ள ஆற்றுவழி கிராமத்தை சேர்ந்த இவர் சென்னையில் வசித்து வருகிறார். ஐகோர்ட்டு வக்கீலாக உள்ளார்.
வக்கீல் ராம்ராஜ் நேற்று செங்கோட்டைக்கு வந்தார். அவர் மீனாட்சிபுரத்திற்கு வந்தார். அவர் அப்பகுதி பொதுமக்களிடம் சுவாதி கொலை வழக்கு சம்பந்தமாக விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுவாதி கொலை வழக்கில் அப்பாவியான ராம்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்த கொலை வழக்கில் சம்பந்தம் இல்லை என உறுதியாக கூற முடியும்.
இச்சம்பவத்தில் சட்டமீறல் நடந்துள்ளது. காவல்துறை, நீதித்துறையால் ஜனநாயகம் சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் இருட்டில் நடக்கும் திருட்டு சம்பவத்தில் கொள்ளையர்களின் உருவங்கள் தெரியாது. எனவே அதுபோன்ற வழக்குகளில் கைதானவர்களை சிறையில் வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம்.
மேலும் இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகளின் படங்களும் ஊடகங்களில் வெளிவராது. ஆனால் தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக சுவாதி கொலை சம்பவத்தில் ராம்குமார் தான் குற்றவாளி என போலீசார் முடிவு செய்து அவரது படத்தையும் வெளியிட்டார்கள்.
ராம்குமாரை பிடித்த போலீசாரையும் உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள். பின்னர் ஏன் இந்த வழக்கில் தற்போது அடையாள அணிவகுப்பு நடத்தப்படுகிறது? ராம்குமாரை அடையாளம் பார்ப்பவர்கள் போலீசாரின் நிர்பந்தத்தை மீறி அவர்களால் என்ன சொல்ல முடியும். காவல்துறையின் இந்த நடவடிக்கை மிகவும் மோசமான செயல்.
ராம்குமார் போலீசாரின் பிடியில் சிக்கிய போது அவர் தற்கொலைக்கு முயன்றார் என்பதில் உண்மை இல்லை. அவருடைய கழுத்து அறுபட்டதற்கு போலீசார்தான் காரணம். இன்று மதியம் 3 மணிக்கு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை சந்தித்து பேச உள்ளேன்.
காவல்துறை இல்லாமல் நான் மட்டும் ராம்குமாரை தனியாக சந்தித்தால் சுவாதி கொலை வழக்கில் பல உண்மைகள் நிச்சயம் வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad