புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 ஜூலை, 2016

ஐ.நா பேரவையின் யோசனை நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல்

ஐக்கிய நாடுகள்  மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய இலங்கையில் நிறுவப்பட்ட  இருக்கும் காணாமல் போனோரை தேடும் அலுவலகம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இதனை கூறியுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட லங்கா சமசமாஜக் கட்சியின் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குபவர் என சிலர் சொல்லும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்