புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2016

யாழ். மாவட்டத்தில் 100 ஏக்கர் அரச காணிகளை தெரிவு செய்தால் அமைச்சினூடாக 625 வீடுகளை அமைத்து தருகின்றேன் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ யாழ். அரச அதிபரிடம் கோரிக்கை

இலங்­கையில் எதிர்­வரும் 2025ஆம் ஆண்­டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து மக்­க­ளதும் வாழ்­விட தேவைகள் பூர்த்­தி­செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்­கான
குடி­யி­ருப்பு திட்­டங்கள் வழங்­கப்­படும். அத்­துடன் யாழ்.மாவட்­டத்தில் 100 ஏக்கர் அரச காணி­களை தெரிவு செய்­யுங்கள்.
அதில் எமது அமைச்­சி­னு­டாக 625 வீடு­களை அமைத்து தரு­கின்றேன் என வீட­மைப்பு மற்றும் நிர்­மா­ணத்­துறை அமைச்சர் சஜித் பிரேம­தாஸ யாழ். அரச அதி­ப­ரிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.
வீட­மைப்பு மற்றும் நிர்­மா­ணத்­துறை அமைச்சின் ‘செமட்ட செவன விசி­ரிய’ தேசிய வீட­மைப்பு வேலைத்­திட்­டத்­துக்­கான பய­னா­ளி­க­ளுக்­கான காசோலை வழங்கும் நிகழ்வு நேற்­று­முன்­தினம் யாழ். வீர­சிங்கம் மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது.
இந்­நி­கழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்டு காசோ­லை­களை பய­னா­ளி­க­ளுக்கு வழங்­கி­வைத்து உரை­யாற்­று­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,
நான் யாழ்ப்­பா­ணத்­திற்கு வரு­கை­தரும் போது மக்­க­ளு­டைய வாழ்க்கை முறை­க­ளையும் அவர்­க­ளது வாழ்­வி­டங்­க­ளையும் அவ­தா­னித்து கொண்டே வந்தேன். அந்­த­வ­கையில் அவர்­க­ளது வாழ்க்கை தரத்தை இன்னும் 5,6 ஆண்­டு­களில் உயர்த்­து­வ­தற்­காக பாடு­ப­டுவேன்.
எனது தந்தை ரண­சிங்க பிரேமதாஸ 83 வீட­மைப்பு கிரா­மங்­களை யாழ்.மாவட்­டத்­திற்கு நிறு­வி­யி­ருந்தார். இந்­நி­லையில் தற்­போ­தைய ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகி­யோ­ரது ஆட்­சியில் எனது தந்­தையின் வீட்­டுத்­திட்­டத்­திற்கும் அதி­க­மான வீடு­களை நிறு­வுவோம்.
இதன்­படி யாழ். மாவட்ட அர­சாங்க அதி­ப­ரிடம் ஒரு வேண்­டுகோள் விடுக்­கிறேன் யாழ். மாவட்­டத்தில் 100 ஏக்கர் அரச காணி­களை தெரிவு செய்­யுங்கள். அதில் எமது அமைச்­சி­னு­டாக 625 வீடு­களை அமைத்து தரு­கின்றேன்.
முன்­னைய ஆட்­சியில் வடக்­கிற்கு வசந்தம் கிழக்­கிற்கு உதயம் என்ற பெயரில் பல வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தார்கள். ஆனால் அவ்­வா­றான திட்­டங்­களின் மூலம் உண்­மை­யான அபி­வி­ருத்தி மக்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை.
அவ்­வா­றான வேலைத்­திட்­டங்­க­ளி­னூ­டாக ஆட்­சி­யா­ளர்­களும் அவர்­க­ளது குடும்­பங்­களும் உற­வி­னர்­க­ளுமே அபி­வி­ருத்­தி­ய­டைந்­தார்கள்.
ஆனால் தற்­போ­தைய எங்­க­ளு­டைய ஆட்­சியில் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர், அமைச்­சர்கள் தங்­க­ளுக்­கான அபி­வி­ருத்­தியை மேற்­கொள்­வ­தில்லை. மாறாக சாதா­ரண மக்­க­ளு­டைய தேவைகள் பூர்த்­தி­செய்­யப்­ப­டு­கின்றன.
ஒவ்­வொரு தனி­ம­னி­தனும் அபி­வி­ருத்­தி­ய­டைக்­கூ­டிய வகை­யி­லேயே எமது ஆட்­சி­யா­ளர்கள் செயற்­ப­டு­கி­றார்கள். இதனை மக்கள் அறிந்­தி­ருப்­பார்கள்.
கடந்த 2015ஆம் ஆண்டு நாட்­டினை நாம் பெற்­றுக்­கொள்ளும் போது இந் நாடு பாழ­டைந்து சீர்­கு­லைந்து போயி­ருந்­தது. அவ்­வா­றான வகையில் முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் நாட்டை சீர­ழித்­தி­ருந்­தனர்.
அப்­போது மக்கள் இன, மத, அந்­தஸ்து ரீதி­யாக பிரிக்­கப்­பட்டு பிள­வு­ப­டுத்­தப்­பட்டு இருந்­தார்கள். ஆனால் நாம் ஆட்­சியை பெற்­றுக்­கொண்­டதன் பிறகு அனை­வரும் ஒரு குடையின் கீழ் ஒற்­று­மை­யாக திரண்­டி­ருக்­கின்றோம்.
எனினும் சிலர் இன்­னமும் எமது மக்­க­ளி­டையே நச்சு விதை­களை விதைக்க பார்க்­கி­றார்கள். அத்­த­கை­ய­வர்­க­ளி­ட­மி­ருந்து விடு­பட்டு எமது ஒற்­று­மை­மிக்க ஆட்­சிக்கு உங்­க­ளது ஒத்­து­ழைப்பு அவ­சியம்.
அவ்­வா­றான ஒத்­து­ழைப்பை நீங்கள் தருவீர்களானால் உங்களை மரியாதையுடனும் கௌர-வத்து-டனும் வாழ வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம்.
மேலும் எமது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது வழிநடத்தலில் எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைத்து மக்களதும் வாழ்விட தேவைகள் பூர்த்தி-செய்யப்பட்டு அவர்களுக்கான குடியிருப்பு திட்டங்கள் வழங்கப்படும் என்றார்

ad

ad