புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 ஜூலை, 2016

தமிழ் யுவதி ஒருவர் நுவரெலியாவில் தற்கொலை

வரெலியா ராகல பகுதியில் தமிழ் யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தபொல, கொணபிட்டியவத்தவை சேர்ந்த செல்வராசா பிரியதர்சனி (28) வயதுடையவர் எனவும், 21 நாட்கள் முன்னரே இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த யுவதியின் கணவர் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த பொழுது தனது மனைவி வீட்டில் இறந்து கிடப்பதை அவதானித்தவர் பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த யுவதி தனது நண்பி ஒருவருக்கு தொலைபேசியில் அறிவித்த பிற்பாடே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.