புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2016

தமிழீழத் தேசியக்கொடி பட்டொளிவீச இடம்பெற்ற அமெரிக்க-தமிழர் விளையாட்டு விழா

தமிழீழத் தேசியக் கொடி பட்டொளிவீச அமெரிக்காவில் தமிழர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை மற்றும் சமூக உடல்நல அமைச்சின் முன்னெடுப்பில் இது இடம் பெற்றுள்ளது.
நியு யோர்க்கில் உள்ள Forest Parkல்  இடம்பெற்றிருந்த இப்போட்டிகளில் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களும் மக்களோடு மக்களாக பங்கெடுத்து வீரர்களை உற்சாகப்படுத்தினார்.TGTE us19TGTE us20TGTE us21TGTE us23
சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்குமான விளையாட்டுக்கள் இடம்பெற்றிருந்ததோடு, தமிழீழத் தாயகத்தினை நினைவிருத்தும் வகையில் தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்றிருந்தன.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கதத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட வெற்றிக் கேடயங்களும், மடல்களும் வீரர்களுக்கு வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.

ad

ad