20 டிச., 2018

மொரின்யோவை நீக்கியது மன்செஸ்டர் யுனைட்டெட்

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட், தமது முகாமையாளர் ஜொஸே மொரின்யோவை நேற்று நீக்கியுள்ளது.

போர்த்துக்கல்லைச் சேர்ந்த 55 வயதான மொரின்யோ, 2016ஆம் ஆண்டு மேயில் மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முகாமையாளராகப் பொறுப்பேற்று, மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கு லீக் கிண்ணத்தையும் யூரோப்பா லீக் பட்டங்களையும் பெற்றுக் கொடுத்தபோதும் தற்போதைய நிலையில், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் லிவர்பூலை விட 19 புள்ளிகள் பின்தங்கியுள்ளது.

நாளை மறுதினம் இடம்பெறவுள்ள கார்டிப் சிற்றி அணிக்கெதிரான போட்டிக்கு முன்பதாக தற்காலிக முகாமையாளரை நியமிக்க எதிர்பார்க்கின்ற மன்செஸ்டர் யுனைட்டெட் ஒலே குனார் சோக்‌ஷரை தற்காலிக முகாமையாளராக இன்று நியமித்தது.