20 டிச., 2018

எது வடடாரபேதம் --.அப்படி எதுவுமேயில்லை  -ஒரு அலசல் கட்டுரை
புங்குடுதீவு  என்னும்   ஒரு பெரிய  ஊரில்
உள்ளோர் இடையே  சிலர்  அண்மைக்காலமாக  வடடாரபேதம் பார்க்கிறார்கள் என்ற தொனியில் விசமத்தனமான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள் .வடமாகாணத்தில் உள்ள ஊர்களில் புங்குடுதீவு  ஒரு பெரிய  ஊர் .புலம்பெயர் புங்குடுதீவு மக்கள் பலர்  அங்கம் அங்கமாகவும் முழுதீவுக்குமாகவும் பல  நல்ல  முன்னேற்றகரமான  பணிகளை  செய்து வருகின்றார்கள்.அவை  சிரியனவாகவும் பாரியனவாகவும் அமைந்து விடுகின்றன. சில  குழுமங்கள் ,சில பாடசாலை அமைப்புக்கள் ,சில சனசமூக நிலையங்கள் விளையாட்டுக்கழகங்கள்  தத்தம் பகுதிகளில்  மட்டும் இது போன்ற பணிகளை செய்வது  யதார்த்தமானது .அதனைவிட சில  நண்பர்கள் அல்லது  உறவுகள் கூட  ஒன்று சேர்ந்து அவர்களின் சொந்தப்பகுதிகளில்  பல நல்ல  திட்ட்ங்களை தீட்டி  செயல்வடிவம் கொடுத்து  வெற்றி கண்டுள்ளார்கள் . ஒவ்வொரு  பகுதிகளிலும் ஒவ்வொரு விதமான  தே வைகள்  உள்ளன  அவற்றுக்கு தக்கமாதிரி  அவை  நடைபெறுகின்றன .எந்த  எந்த பகுதிக்கு  என்ன என்ன தே வையோ  அவற்றை அந்த பகுதி  மக்களே  செய்து கொண்டே  வருவதில் எந்த தப்புமில்லை அவரவர்  வசதிக்கு  தக்க அளவில் அவை  அமைகின்றன . சில பகுதி மக்கள் நிறையவும் சில பகுதி மக்கள்  ஓரளவுக்கு சில பகுதி மக்கள்  எதுவுமே செய்யாமலும் இருப்பது கண்கூடு . இதனால்  தமக்கிடையே  போட்டி பொறாமை  பேதங்கள் உருவாவது  யதார்த்தம்  .ஆனாலும் இவை வடடார பேதம் என்ற  சொல்லுக்குள் திணித்து பார்க்க முடியாது .இன்னும் சிலர்  சும்மா இருந்து கொண்டு  செயல்படும் பகுதியினரை பார்த்து  வடடார பேதம் பார்த்து செய்யாமல்  தங்கள் பகுதியையும் சேர்த்து செய்யலாமே என்று  வியாக்கியானம்  கொடுப்பது நீதிக்கு  புறம்பானது . 12  வடடார மக்களும் புலம்பெயர் தேசங்களில் வசதி வாய்ப்புகளோடு தான் வாழ்கிறார்கள் .எல்லாராலும் இவற்றை  செவ்வனே செய்ய முடியும்  மண்வாசம்  இருக்க வேண்டும்  பிறந்த மண்மீது பற்று இருக்க வேண்டும்  ,யாரும் இது போன்ற பகுதி பகுதி செயல்பாடுகளுக்கு வடடார பெத்த வர்ணம் பூசிக்கெடுக்க வேண்டாம் யாரவது எங்காவது செய்யட்டும் விட்டு விடுங்கள் ஒட்டுமொத்தமாக  சேரும் பொது புங்குடுதீவு  முன்னேறும் பெருமை பெரும் புகழ் காணும் எங்கும் நடப்பது  போல் இங்கும் ஒரு துர்க்குணமுடையோர் நன்மை செய்யும் சிலர் மீது  மோசமான  அனாமதேய  விமர்சன  தகவல்களை பரப்புவதில் கனாயிருக்கிறார்கள் தாங்களும் செய்ய மாடடார்கள் மற்றவர்கள் செய்தாலும் விடமாடடார்கள் இந்த விசா  ஜந்துக்கள் கனகச்சிதமாக  உரிய நேரத்தில் தந்திரமாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு  கொண்டிருக்கிறார்கள்  உறவுகளை  இவர்களை அடையாளம் கண்டு  கிள்ளி எறியுங்கள்  நன்றி .