புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 டிச., 2018

பூட்டை உடைத்த நடிகர் விஷால் திடீர் கைது- நடிகர் மன்சூர் அலிகானும் காதானார்

கடனில் ஓடிக்கொண்டு இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை, பெரும் அழிவில் இருந்து காப்பாற்றி. பணத்தை சேர்த்து அதனை மீண்டும் குறுகிய காலத்தில் கட்டி எழுப்பியவர் நடிகர் விஷால். இவருக்கு பின்னால் பல மூத்த நடிகர்கள் கூட வயது வித்தியாசம் பாராமல் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் எங்கே தான் தமிழன் ஒற்றுமையாக இருக்கிறான்.

பொதுக்குழுவில் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக நடிகர் விஷால் முடிவெடுப்பதாக கூறி தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர், நேற்று தேனாம்பேட்டை மற்றும் அண்ணா சலையில் உள்ள சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் பூட்டை இன்று விஷால் உடைப்பார் என்று, அவரது ஆதரவாளர்கள் கூறிவந்த நிலையில். அங்கே பொலிசார் குவிக்கப்பட்டார்கள். ஆனால் அதனையும் மீறி நடிகர் விஷால் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் பூட்டை உடைக்க முற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொலிசார் இருவரையும் கைது செய்துள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

அதை தொடர்ந்து எதிரணியில் உள்ள ஜே.கே. ரித்தீஷ், தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் தமிழக முதல்வரை இன்று சந்தித்து பேசினர். ஒட்டு மொத்தத்தில் ஒ.பன்னிர் செல்வத்தை வைத்து நடிகர் விஷாலை அடக்க இவர்கள் முடிவெடுத்துள்ளார்கள்.