20 டிச., 2018

இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

அடுத்தாண்டு முதல் காலாண்டுக்கான நிதியை அங்கிகரித்துக்கொள்ள இடைக்கால கணக்கறிக்கையை நாளைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதற்கமைய நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் நாளைய தினம் இடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.