புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

20 டிச., 2018

ரணிலின் அடுத்த அதிரடி? அடுத்துவரும் நாட்களும் அதிரப்போகின்றன??

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் கொடுக்கப்பட்ட அமைச்சர்கள் பட்டியலை நிராகரித்த ஜனாதிபதியின் செயலுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த களத்தில் இறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு எப்படியாவது அமைச்சுப் பதவியை வழங்க ரணில் புது வியூகம் அமைத்துள்ளதுடன், அவர்களுக்கு அமைச்சுப் பதவியை வழங்குவதற்கான பிரேரணையினை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

எவ்வாறாயினும் குறித்த பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி நிராகரித்தாலும் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட முடிவுசெய்துள்ளதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது