20 டிச., 2018

நிதி மற்றும் ஊடக அமைச்சில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்!

ஜனாதிபதி மைத்திரிபால கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினை பிரதமராக நியமித்து நாட்டில் பாரிய அரசியல் நெருக்கடியொன்றினை ஏற்படுத்தியிருந்தார்.

இவ்வாறு அவர் ஏற்படுத்திய அரசியல் நெருக்கடி 50 நாட்களாக தொடர்ந்து வந்த நிலையில், மீண்டும் கடந்த 16ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றதைத் தொடர்ந்து தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

அவ்வாறான நிலையில் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டு 50 நாட்கள் ஆகின்ற நிலையில், இன்று ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கான அமைச்சர்கள் இன்று 20ஆம் திகதி நியமனங்களை பெற்றுக் கொண்டனர். 29 அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிபிரமாணம் செய்து கொண்டனர்.

இவ்வாறு இன்றைய தினம் நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார்.

அவர் பதவியேற்று ஒருசில நொடிகளில் நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் மங்கள சமரவீரவின் புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது. குறித்த புகைப்படம் சமூகவளைத்தளங்களில் வேகமாகப் பரவுவதைக் காணக்கூடிய நிலையில், மங்கள சமரவீரவின் புகைபடத்தினை நிதியமைச்சில் மாட்டும் நபர் அவரது புகைப்படத்தை வணங்கும் காட்சியும் பதிவாகியிருந்தது.

அதனைத் தொடர்ந்து மங்கள சமரவீர நிதியமைச்சுக்கு சென்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதாகவும், அதேசமயம் நாளைய தினம் கூடவுள்ள நாடாளுமனறில் இடைக்கால வரவுசெலவு திட்டத்தினை சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.