புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 செப்., 2019

ஒரே நாளில் 500 பாடசாலை கட்டடங்கள் கையளிப்பு

அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் இரண்டாவது நடவடிக்கையின் கீழ், ஒரே நாளில் 500 பாடசாலை கட்டடங்களை கையளிக்க கல்வியமைச்சு தயாராகியுள்ளது.இதற்காக, 10 ஆயிரம் மில்லியன் நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2016ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக, நாட்டில் 9064 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், செப்டெம்பர் 9ஆம் திகதி குறித்த 500 பாடசாலை கட்டங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது