மேற்படி ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்று வியாழக்கிழமை இரவு திருமஞ்சத் திருவிழாவாகும். மின்னொளியில் அழகாக அலங்கரிக்கப்பட்ட திருமஞ்சத்தில் சுவாமி ஏற்றப்பட்டு திருவீதி உலா இடம்பெற்றது.
இதன்போது, இடைநடுவே மஞ்சத்தின் சில்லுகள் இறுகி அது அசையாமல் நின்றது. இதனால் பக்தர்கள் கவலையடைந்தனர். அவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. பிழையைத் திருத்தி தொடர்ந்தும் மஞ்சத்தை இழுத்துச் செல்ல ஆலய நிர்வாகமும் பக்தர்களும் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டனர். அது முடியவில்லை.
இதனால், ஜே.சி.பி வாகனம் கொண்டுவரப்பட்டு அதைக்கொண்டு மஞ்சத்தை இழுக்க முயற்சிக்கப்பட்டது. எனினும், அதுவும் சாத்தியப்படவில்லை. மஞ்சம் அசையவில்லை.
இதனால் மஞ்சத்தில் இருந்து சுவாமியை இறக்கி பக்தர்கள் தோளில் சுமந்து சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பக்தர்கள் கவலையடைதுள்ளனர்.