இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துமாறு கோருவது தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு அனுப்பப்படவுள்ள ஆவணங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று கையெழுத்திட்டுள்ளார்.
அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் சட்டமா அதிபரினால் 21 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு வழங்குவதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதியால் இன்று சோதிக்கப்பட்ட பின்னர் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி கையெழுத்திட்டு உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த ஆவணங்கள் வெளிவிவகார அமைச்சினால் கூடிய விரைவில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது