புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2019

முதல் படத்திலேயே விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் லொஸ்லியா

தற்போது நடைபெற்றுவரும் பிக்பாஸ் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை பெண்மணி லொஸ்லியா திரைத்துறையில் காலடி எடுத்துவைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இயக்குனர் சேரன், தான் இயக்கவுள்ள புதிய படத்தில் லொஸ்லியவை ஹீரோயினாக அறிமுகம் செய்து வைக்கவுள்ளாராம். இப்படத்தில் ஹீரோவாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

சேரன் பிக்பாஸிற்கு வருவதற்கு ஐடியா கொடுத்ததே விஜய் சேதுபதி தான் என்று கூறப்பட்டது.மேலும் லொஸ்லியாவுக்கும் சேரனுக்கும் ஆரம்பத்தில் நல்ல அப்பா மகள் உறவு இருந்தாலும் பின்னர் கொஞ்சம் பிரச்சனை ஆரம்பித்தது. ஆனால் , தற்போது இருவருமே அதை சரிசெய்து வருகின்றனர்.

சேரன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் இதற்கான வேலைகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்னர் கூட இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் சேரனுக்கு போன் கால் அழைப்பு விடுத்து ஆறுதல் கூறினார். அந்த நேரத்தில் தான் லொஸ்லியாவுக்கும் சினிமாவில் மிகப்பெரிய வாய்ப்பு உண்டு என்று கூறி ஆச்சரியம்ஒன்றை கொடுத்தார்.

எனவே கூடிய விரைவில் இதற்கான அதிகாரபூர்வ தகவல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவே அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை

ad

ad