தேசிய தலைவர்கள் எனக் கூறி கொள்வோர், தென்னிலங்கை சிங்கள மக்களைத் தவறாக வழி நடத்தி வருவதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
'சிறுபான்மைச் சமூகங்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதன் மூலம் நாட்டை மீண்டும் அழிவுக்குள் தள்ளிவிடும் அச்சுறுத்தலே காணப்படு கிறது. போலித்தனமான தேசியவாதிகளால் நாடு பேராபத்துக்குள்ளே தள்ளப்படும். சுதந்திரமடைந்து 70 வருடங்களைக் கடந்த நிலையிலும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க தேசிய அரசியல் கட்சிகள் தவறிவிட்டன.
தென்னிலங்கையின் தேசியத் தலைவர்கள் எனக் கூறிக்கொள்வோர், பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை தமது சுயநல அரசியலுக்காக பெற்றுக்கொள்வதிலே குறியாக இருக்கின்றனர். தங்களை தேசியவாதிகள் எனக் கொள்பவர்கள் பக்கச்சார்பாகவும், சிறுபான்மைச் சமூகங்களை ஏமாற்றுபவர்களாகவுமே செயற்படுகின்றனர். நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளைக் கடந்துள்ளது என்று கூறினார்.