புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 நவ., 2019

லண்டனில் 10 இந்தியர்கள திடீர் கைது!
லண்டனில் 5 இந்தியர்களுக்கும், 5 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் எதிராக, போதைப்பொருட்கள் கடத்தல், அமைப்பு ரீதியிலான குடியேற்ற குற்றம் ஆகியவற்றின் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக முறைப்
பாடு எழுந்துள்ளது.
இதையொட்டி இங்கிலாந்தின் தேசிய குற்ற முகமை (என்.சி.ஏ.) விசாரணை நடத்தியது.
அதைத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் சரண்சிங், வல்ஜீத் சிங், ஜஸ்பீர் சிங் டால், சுந்தர் வெங்கடாச்சலம், ஜஸ்பீர் சிங் மல்கோத்ரா, மன்மோகன் சிங் கபூர், பிங்கி கபூர் உள்ளிட்டோர் ஆவர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார்.
10 பேரும் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்