புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 நவ., 2019

சுமந்திரன் பாதுகாப்பும் விலக்கப்படலாம்?

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் தொடர்ச்சியாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்பும் விலக்கிக்கொள்ளப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, திலக் மாரப்பன ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இருப்பினும், ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு இன்னும் அவ்வாறே காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது