புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 நவ., 2019

மைத்திரிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! துண்டிக்கப்பட்டது தொலைபேசி அழைப்புகள்நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பதவி விலக தயாரில்லை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தொலைபேசி அழைப்புகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டு கொள்வதில்லை எனவும் மேலும் சிலர் அவரது தொலைபேசி அழைப்புக்களை துண்டித்துள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பதவி விலக தயாரில்லை என்பதுடன் அதனை நிராகரித்துள்ளனர்.

இதனால் மைத்திரி நாடாளுமன்றத்திற்கு வரும் வாய்ப்பு குறைந்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த போது, பதவி விலக தயாராக இருப்பதாக தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.