புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 நவ., 2019

கூட்டமைப்பு பரிந்துரைப்பவரை பரிசீலிக்க முடியும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் நேரில் தெரிவித்துள்ளார்வட மகாண ஆளுநர் யார்? முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் பரிந்துரை

முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை நியமிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வடக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் சகல தரப்புகளும் முன்வைத்த பரிந்துரைகளைப் பரிசீலித்து பொருத்தமானவரை நியமிப்பேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரைப்பவரை பரிசீலிக்க முடியும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் நேரில் தெரிவித்துள்ளார்
இதேவேளை 29 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ள ஜனாதிபதி வடக்கு மாகாண ஆளுநரையும் அழைத்து செல்வார் எனவும் ஒருதகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது