புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 நவ., 2019

சஜித் தனி வழி?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையையும், எதிர்க் கட்சித் தலைமைப் பதவியையும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கவில்லையாயின் அரசியல் ரீதியில் பல்வேறு தீர்மானங்களை எடுப்பதற்கு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு தீர்மானங்களை நாம் எடுத்துள்ளோம். எதிர்வரும் நாட்களில் அவற்றை மக்களுக்கு அறிவிக்கவுள்ளோம். மக்கள் எம்முடன் உள்ளனர். கட்சியிலுள்ள ஒரு சிலரே மாற்றுக் கருத்தில் உள்ளனர். மக்கள் அவர்கள் தொடர்பிலும் விரைவில் தீர்மானம் ஒன்றை எடுக்கும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனிக் கட்சியொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் சூழ்நிலையை அடிப்படையாக வைத்தே தீர்மானிப்போம். நாம் எதிர்பார்க்கும் விடயம் நிகழவில்லையாயின் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்துகொண்டு தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுப்பதில் அர்த்தமில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்