புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2020

பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியான கடவுள்கள் 55 .ஆகும்

கடவுள்கள் 55 .  இருக்கவேண்டி வரும் என்று  தெரிந்தும் மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர்  தாதியர் கடவுள்கள்   தானே  அதுவும் பிரித்தானியாவில் மனப்பயத்திலேயே  வெளிநாடடவரை  கொரோனா தொற்றுக்கு அஞ்சி வாடகைக்கு  இருக்கவே  விடாமல்  துரத்துகிறா
ர்க்ள  .ரித்தானியாவின் NHS-ல் பல ஆண்டுகளாக பணியாற்றும் நர்ஸ்கள், மருத்துவ உதவியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட மொத்தம் 55 பேர் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் உத்தியோகப்பூர்வமாக இதுவரை 43 ஊழியர்கள் இறந்ததாக மட்டுமே கூறப்படுகிறது.
மோரிஸ்டன் மருத்துவமனையில் பணியாற்றும் Jenelyn Carter என்ற ஊழியர் கொரோனாவுக்கு இன்று பலியான நிலையில், இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 55 என தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவை பொறுத்தமட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 888 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 15,000 கடந்துள்ளது.
கொரோனாவால் மரண எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடக்கும் 6-வது நாடு பிரித்தானியா என தெரியவந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக கொரோனாவுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 5,525 என பதிவாகியுள்ளது.
நாடு மொத்தம் கொரோனாவுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 114,217 என பதிவாகியுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி இதுவரை 15,464 பேர் மரணமடைந்துள்ளனர்.

ad

ad