புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 ஏப்., 2020

சுவிட்சர்லாந்தில்  வேலைக்குறைப்பு திடத்தில் 80 வீதம் சம்பளம் கிடைக்கும் எப்படி ?கொரோனா அவசரகால  நிலை  காரணமாக  உங்கள் வேலை தருவோர் உங்களுக்கு  முழுவதுமான அல்லது பகுதி நேர  kurzarbeit  செய்திருந்தால் 80 வீத சம்பளம் கிடைக்கும் .முழுவதுமாக செய்திருந்தால் உங்கள்  சம்பள ஒப்பந்த பதிவு சம்பளத்தில் 80 வீதம் கணிக்கப்படும்   இங்கும் வளமை போல உஙக்ளுக்கான சேமலாபநிதி ஓயவூதி யா காப்புறுதி வேலையிழப்பு காப்புறுதி  விபத்துகாப்புறுதி  என்பன வீத அடிப்படையில் கழிக்கப்படும் உணவகங்கள் வைத்தியசாலைகள் முதியோர் இல்லம்  கான்டீன்கள்  போன்றவற்றில் வேலை செய்வோர்  வழமையாக கடடாயம் உங்கள் உணவுசெலவை  கழிப்பதானால் இப்பத்து முழுநேர  வேலைக்குறைப்பு இருந்தால்  அந்த கழிவு செய்ய முடியாது .அதாவது முழுநாளும்  வேலைக்கு போகாவிடின் உங்களுக்கு சாப்பிட்டுக்காசு என்று கழிப்பது இருக்காது உதாரணம் 4000 பிராங்க் பதிவு என்றால் இப்போது 3200 பிராங்க்  என கணிக்கப்பட்டு அதிலும் வழமையாக கழிக்கும் வீதங்கள் கழியும்  ஆனால் இந்த  தொகை கொஞசம்  குறைவாக இருக்கும் . பகுதிநேர   வேலைக்குறைப்பு என்றால் நீங்க  வேலை செய்யும்  மணித்தியாலக்கணக்கில் செய்த அளவுக்கு முழுச்சம்பழ வீதமும்  குறைகின்ற மணித்தியால  அளவுக்கு  80 வீதமும்  சேர்த்து  கூடடபட்டு  கிடைக்கும் உதாரணம்  வழமையாக முன்பு ஒரு மாதத்தில்  நீங்கள் 180  மணித்தியாலம் வேலை செய்ப்பவர் என்றால் இப்போது  90 மணித்தியாலம்   வேலைக்கு  சென்றிருந்தால் 50  வீதம் என கணக்கு  வைக்கப்பட்டு  4000 பிராங்க் சம்பளக்காரர்   2000+1600 = 3600  இல் கழிவு போக  கிடைக்கும் .   இந்த  சிக்கலில்  சில சிறியஅளவிலான  வேலைவழங்குவோர் (சிறுநிறுவனங்கள் ) துஸ்பிரயோகம்  செய்யலாம் அல்லது  சரியாக விளங்கி கொள்ளாமல்  கூட தவறுகள்  செய்ய வாய்ப்புண்டு கவனமாக இருக்கவேண்டும்
முழுவேலை  இல்லாதிருப்போருக்கும் சில நன்மைகளும் உண்டு .  கொரோனாவில் இருந்து  தப்ப வாய்ப்பு உண்டு .பொது போக்குவரத்து வேலை செய்யும் இடம் வாடிக்கையாளரோடு பழகும் முறை வைத்தியச்சாலை  முதியோர் இல்லங்கள் என கசடமான  நிலையால்  உங்களுக்கு  நன்மை உண்டு
அதனை விட போக்குவரத்து செலவு  எரிபொருல் செலவு வாகன செலவு தண்டப்பணம்  வராது 
வேலை இடத்தில கடடய சாப்பாடுகாசு கழிவு  இருக்காது  200  முதல்  350  பிராங்  வரை  கூடுதல்  உண்டு
குடும்பத்தோடு வாழும்  நேரம் தாராளம் உண்டு , வீட்டு வேளையிலும் பங்கு  செலுத்தலாம்