19 ஏப்., 2020

விவசாயிகளிடம் ஆயிரக்கணக்கான கிலோ பூசணிக்காய் சந்தைப்படுத்த முடியாத நிலை வன்னி வவுனியா பகுதிகளில் விவசாயிகளிடம் ஏராளமான போசணை கத்தரிக்காய் வெண்டிக்காய் பசன்புரூட் ,வாழைப்பழம் மிளகாய் பயற்றங்காய் கறிமிளகாய் சந்தைப்படுத்தமுடியாமல் அழுகி போவதாக அறியமுடிகிறது இதனால் விவசாயிகளின் வருடாந்த வருமானமும் இல்லாமல் அடுத்த வருடம் வரையிலான சேமிப்பும் இன்றி தவிக்கிறார்கள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக கிளிநொச்சியில் மரக்கறி உற்பத்தியில் ஈடுப்பட்டு வரும் பல விவசாயிகள் தற்களது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலையில் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

தோட்டங்களில் மரக்கறிகள் அழுகிய, முற்றிய நிலையில் காணப்படுகிறது. பெருமளவு நிதிச் செலவில் ஏக்கர் கணக்கில் விவசாய உற்பத்தி நடவடிக்கையில் ஈடுப்பட்ட போதும் அவற்றை சந்தைப் படுத்த முடியாது பெரும் நட்டத்தை தாம் அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்