19 ஏப்., 2020

நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு: கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள கோரிக்கை
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த நான்கு வாரங்களாக அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் ஐந்து மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் தளர்த்தப்படவுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனாவை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு சுகாதார முறைப்படி அவதானமாக செயற்பட வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து பொது இடங்களில் கூட்டம் கூடாமல் அவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியில் செல்லுமாறு கோரப்பட்டுள்ளது.