புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2020

கொரோனாவால் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்டுள்ள பரிதாப நிலை! இதிலிருந்து மீளப்போவது எப்படி?
உலகின் பணக்கார நாடு, அழகிய அமைதியான , வேலையற்றோர் அரிதான நடுநிலையான மனிதநேயமுள்ள தேசியப்பற்றுள்ள சட்டஒழுங்கை கடைபிடிக்கின்ற நாடு சுவிட்சர்லாந்துக்கு அடுத்து வரும் காலங்கள் நெருக்கடியானவை


சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை விட, அங்கு கடந்த சில நாட்களில் வேலையிழந்தவர்கள் மற்றும் வேலைநேரக் குறைப்பால் தங்கள் வருவாயை இழந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிரித்திருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக சுவிட்சர்லாந்தில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த நிலையில்,

மூன்று கட்டங்களாக ஊரடங்கைத் தளர்த்துவது பற்றிய அறிவிப்புக்களை அந்நாட்டு அரசு நேற்று வெளியிட்டது.

அதைத் தொடர்ந்து, இன்று பிற்பகலில் நாட்டின் தலைநகரான பேர்னில் அரசு சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது.

அதில் சுவிஸின் பொதுச்சுதாதரத் துறையான Federal Office of Public Health of the Swiss Confederation-ன் தலைமைப் பிரதிநிதி டேனியல் கோச், மற்றும் தொழிலாளர் இயக்குநரகமான SECO-State Secretariat for Economic Affairs SECO-ன் தலைவர் போரிஸ் ஸுர்ச்சர் ஆகிய இருவரும் முக்கிய பிரதிநிதிகளுடன் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பத்திரிகையாளர்கள் மத்தியில் டேனியல் கோச் பேசுகையில், நாட்டில் தற்போது 27 ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா தொற்று இருக்கும் நிலையில், 1327 பேர் உயிரிழந்துள்ளனர்,

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைய துவங்கும், அதே நேரம் தொற்று விகிதமும் கணிசமாக குறைந்து வருகிறது.


இதை வைத்து நாட்டிற்கு ஆபத்து நீங்கிவிட்டது என்று சொல்லிவிடமுடியாது. நோய் எதிர்ப்பு சக்தி மிக்க இளைஞர்களும் இங்கே தொற்றுக்கு ஆளாவது இந்த வைரஸின் தீவிர ஆற்றலை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

அதனால்தான் மக்களிடம் முழுமையான ஒத்துழைப்பைக் கேட்டோம். பத்து வயதுக்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர் கொரோனாவின் கேரியர்கள் அல்ல, அவர்களில் பெரும்பாலானவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாக மாட்டார்கள், அதன் காரணமாக்வே தொடக்கப் பள்ளிகளை விரைவாக மீண்டும் திறப்பது பற்றிய முடிவை விரைவில் அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

இவரை தொடர்ந்து பேசிய SECO-வின் தலைவர் போரிஸ் ஸுர்ச்சர், வேலை நேரத்தை அதிரடியாகக் குறைத்தது மற்றும் பணியிலிருந்து நிரந்தமாக விடுவித்தது ஆகிய காரணங்களால் வேலையின்மையும் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாட்டில் வேகமாக அதிகரித்து வருகிறது.

மார்ச் 15-ஆம் திகதி துவங்கி தற்போதுவரை வேலையற்றோர் மற்றும் வேலையிழந்தோர் எண்ணிக்கை 1,51,000-ஆக அதிகரித்துள்ளது.


கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 33,000-பேர் வேலையிழந்துள்ளனர். இதை அவர்கள் அரசுக்கு முறையாகத் தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார்.

ad

ad