புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

19 ஏப்., 2020

கனடியர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு தான் முக்கியம்! கொரோனா தொடர்பில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவில் முதியோர் இல்லம், நர்சிங் ஹோம் போன்ற கொரோனாவின் தாக்கம் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் கடுமையாக உள்ளதாகவும் இது நமது கணிப்பை ஏமாற்றும் வகையில் அதிகரித்துள்ளது எனவும் பிரதமர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது.

கனடாவிலும் கொரோனாவால் இதுவரை 1310 பேர் பலியாகியுள்ள நிலையில் 31927 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கனடாவில் கொரோனாவின் தாக்கம் குறித்தும் பொருளாதார நிலை குறித்தும் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், கனடாவில் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் நர்சிங் ஹோம் போன்ற பல மருத்துவ இல்லங்களில் கொரோனா வைரசின் தாக்கம் எதிர்பார்ப்பை ஏமாற்றும் வகையில் நாளுக்கு நாள் கூடிக் கொண்டிருக்கிறது.


இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து வரும் கொடுமையும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதை விட கனடியர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு முக்கியம்.

தற்போது ஊரடங்குகளை விடுவித்து பொருளாதாரத்தை மீட்க அதன் கதவை திறப்பது முற்றிலும் பேராபத்தை விளைவிக்கும்.

ஒவ்வொரு மாகாணங்களிலும் கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்தவது தொடர்பாக அனைத்து மாகாணங்களின் கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது என கூறியுள்ளார்.