புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2020

தென்னிலங்கையினை ஆட்டிப்படைக்கும் கொரோனா?

கோத்தா அரசினது எதிர்பார்ப்புக்களிற்கு மாறாக கொரோனா தெற்கை ஆட்டிப்படைக்க தொடங்கியுள்ளது.கொரோனா பரவி வருவதையிட்டு, அநுராபுரம் மாவட்டத்தின் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு பிரவேசிப்பதை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அநுராதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்கள் 9 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, அவர்கள் பயணம் செய்த சில இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே கொரோனா தொற்றினால் நேற்று (28) இனங்காணப்பட்ட 31 பேரில் 21 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஏனைய 6 பேர் தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என்பதுடன், 4 பேர் இராணுவத்தை சேர்ந்தவர்களெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 619 ஆக அதிகரித்துள்ளது.



இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிய 478 பேர் வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன். 134 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

ad

ad