புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

29 ஏப்., 2020

தனிமைப்படுத்தல் படையினர்  புங்குடுதீவிலும்  விடப்பட்டுள்ளனர்
விடுமுறைக்கு   சென்று கடமைக்கு திரும்பிய கடற்படையினரை தனிமை படுத்தலுக்காக  புங்குடுதீவு கழுதைப்பிட்டி வல்லன் கோட்டையாம்புரா   முகாம் களில் கொண்டு வந்து வைத்துள்ளனர் . ஆனாலும் அந்த முகாம்களில் உள்ள படையினர் பொதுமக்களுடன்   சாதாரணமாக முன்னர்  போல்   வெளியே  பழகி வருவது  மக்களுக்கு அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது .  கொரோன விதிமுறைகளின் படி நடக்குமாறு மக்களை தூண்டும் படையினர் தமது விஷயத்தில் இவ்வாறு பாராமுகமாக நடப்பது கவலைதருகிறது அரசாங்கத்துக்கு  முண்டு கொடுத்து வரும் அரசியல்வாதிகள்  இந்த விடயத்தில்  அரசை  கேள்வி கேட்க திராணியற்று காணமுகமாக மௌனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது