29 ஏப்., 2020

யாழ் வேலணை மத்திய கல்லூரியின் ஒரு பகுதியை எரியூட்டிய சிங்களப் படையினர்

யாழ் வேலணை மத்திய கல்லூரியை ஆக்கிரமித்திருக்கும் சிங்களப் படையினர் அதன் ஒரு பகுதிக்குத் தீ வைத்துள்ளனர்.


இதனால் கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியில் உடமை சேதாரங்கள் ஏற்பட்டிருப்பதோடு, தீ பரவியதில் அருகில் இருந்த வயற் காணியின் ஒரு பகுதியும் தீக்கிரையாகி நாசமாகியுள்ளது.

Velanai 1

சிங்களப் படைச் சிப்பாய் ஒருவர் வெண்சுருட்டைப் பற்றி விட்டு அதனை சரியாக அணைக்காததாலேயே தீப்பற்றியதாக கூறப்படுகின்றது.

Velanai

எனினும் தம் மீதுள்ள தவறை மறைப்பதற்காக அருகில் உள்ள வயற் காணி உரிமையாளர் மீது பழியை சிங்கள் படையினர் திருப்பி விட்டிருப்பதோடு, அவர் தனது வயலுக்குத் தானே தீவைத்ததாக குற்றம் சுமத்தியுள்ளனர்