புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

29 ஏப்., 2020

இரவோடு இரவாக வேலணை ,புங்குடுதீவில் தனிமைப்படுத்தும் முகாம்கள்

சிறிலங்கா இராணுவம் மத்தியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக புதிது புதிதாக தனிமைப் படுத்தும் முகாம்கள் வடக்கில் இராணுவத்தினரால் அதிகளவு கைப்பற்றப்படு வருகின்றது.

குறிப்பாக யாழ்ப்பாணம் முல்லைத்தீவு தீவகம் ஆகிய இடங்களில் பல எதிர்ப்புக்களை மீறி இராணுவத்தினர் பாடசாலைகளையும் தனித்துவ முகாம்களையும் தனிமைப்படுத்தும் முகாம்களாக மாற்றி அமைக்கும் இவ் வேளையில் கடந்த இரண்டு நாட்களுக்குள் வேலணை மத்திய கல்லூரியின் மாணவர் விடுதியிலும் புங்குடுதீவில் கோகோ பாயிண்ட் முகாமிலும் கழுதபிட்டி முகாமிலும் இரவோடு இரவாக பேருந்தில் கொண்டு சென்று தனிமை படுத்தல் நடவடிக்கையில் நூற்றுக்கு மேலான நபர்கள் தனிமை படுத்தப்படுத்தப்பட்டுருப்பது தீவுப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அங்கு வாழும் மக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன