விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் 1994ம் கைது செய்யப்பட்டு, நீண்ட காலம் வழக்கை எதிர்கொண்டு, தண்டனை வழங்கப்பட்டு, ஏறக்குறைய 19 வருடம் சிறைவாசம் அனுபவித்து, சிறையில் நீண்ட காலம் கடும் சுகவீனமுற்று, முறையான சிகிச்சை இல்லாமல், நேற்று பரிதாபமாக மரணமடைந்த,
பதுளை பூனாகலை அடாவத்த தோட்டத்தை சார்ந்த காத்தாய் முத்துசாமி என்ற 68 வயது மலையக வயோதிப தமிழ் பெண்ணின் பரிதாப மரணம், அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கின்ற மலையக அரசியல் தலைமைகளின் கையாலாகாதனத்திற்கும், பொறுப்பின்மைக்கும் அடையாளமாக அமைந்துவிட்டது.
இவர்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு உள்ளே இருந்துகொண்டு, அரசாங்க பதவி வரப்பிரசாதங்களை அனுபவிப்பதை வேறு தவிர என்னத்தான் செய்கிறார்கள் என, இவர்களை காணும் இடமெல்லாம் தமிழ் மக்கள் கேள்வி எழுப்பவேண்டும்