தேவகோட்டை அருகே கண்ணன்குடி என்ற இடத்தில் பாஜக பிரமுகர் படைவென்றான் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கண்ணன்குடியைச் சேர்ந்தவர் குப்புசாமி என்பவரின் மகன் படைவென்றான் (36). இவர் அந்தப் பகுதியில் பாஜகவில் வளர்ந்து வரும் பிரமுகராக அடையாளம் காணப்பட்டார். இவருக்கும் அந்தப் பகுதியில் சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.