அற வழியில் போராடிய மாணவர்கள் மீது முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ராஜசேகர் மற்றும் சில காங்கிரஸ் கட்சி குண்டர்கள் சுமார் 50 பேர்கள் கத்தி , கம்பு , அருவா போன்ற பயங்கர கருவிகளால் தாக்கி உள்ளனர் . இதில் 10 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . மூன்று மாணவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது . அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உள்ளனர். இது வரை எந்த காங்கிரஸ் தொண்டரையும் காவல் துறை கைது செய்யவில்லை . இந்த கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதாகவும் மாணவர்கள் கூறி உள்ளனர் .
-
27 மார்., 2013
பழம்பெரும் நடிகை சுகுமாரி மரணம் |
உடலில் தீக்காயம் பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை சுகுமாரி மாரடைப்பால் காலமானார். |
74 வயதான சுகுமாரி சமீபத்தில் தன் தி.நகர் வீட்டில் விளக்கு ஏற்றும்போது புடவையில் தீ பிடித்து, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. முதல்வர் ஜெயலலிதா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுகுமாரியை நேரில் சென்று நலம் விசாரித்தார். முதல்வர் ஜெயலலிதாவுடன் பல படங்களில் நடித்துள்ளார். இருவரும், நெருக்கமான நட்பு கொண்டவர்கள். இந்நிலையில் சுகுமாரி இன்று மாரடைப்பால் காலமானார். சுகுமாரியின் இறுதிச்சடங்குகள் நாளை(27.03.13) |
26 மார்., 2013
|
சாவகச்சேரி நகரசபையின் உறுப்பினரான செல்வன்.ஞா.கிஷோர் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்
எமது இலங்கைத்தமிழரசுக்கட்சி இளைஞர் அணியின் சாவகச்சேரி தொகுதி அமைப்பாளரும், சாவகச்சேரி நகரசபையின் உறுப்பினருமான செல்வன்.ஞா.கிஷோர் அவர்கள், இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்துடன் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)