பொதுவாக்கெடுப்பு கோரும் தமிழக அரசின் தீர்மானத்திற்கு கனடிய மக்களிடையே பெரும் வரவேற்பு
சிறிலங்கா தொடர்பான விவகாரங்களில் ஈழத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தினை கனடியத் தமிழ் மக்கள் சார்பில் கனடியத் தமிழர் தேசிய அவை வரவேற்றுள்ளதோடு, இத்தீர்மானத்தினை ஒருமனதாக நிறைவேற்றியமைக்காக தமிழக அரசுக்கும் , அரசியல் கட்சிகளுக்கும் பாராட்டுக்களையும் , நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.