புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2013

 பறிக்கப்பட்ட காணிகளை மீண்டும் மக்களுக்குப் பெற்றுத் தர முடியுமா? இணக்க அரசியல் வாதிகளுக்கு சவால் விடுகிறார் சம்பந்தன் 
தமிழ் மக்கள் தமது தாயக மண்ணில் இருந்து விரட்டப்படு வதையும் அத்துமீறி சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதையும் தடுத்து, தமிழ் மக்களிடமிருந்து பலாத்காரமாகப் பறிக்கப்பட்டுள்ள
முஸ்லிம்களும் ஏற்கக்கூடிய சமஸ்டியே வேண்டும் தீர்வாக; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பு 
முஸ்லிம் மக்களும் ஏற்கக் கூடிய சமஷ்டித் தீர்வே தமிழர்களுக்குத் தேவை என்று நேற்று வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சோனியாவுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டோரை சோனியா பாதுகாப்பதாக,
பவானி சிங் நீக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதா வழக்கு: பதில் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில்
நாங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்ட இனம்! இதற்கு ஐ.நாவும் உடந்தையாக இருந்ததுதான் வேதனைக்குரிய விடயம்: அனந்தி
நாம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட வேளை ஐ.நா பார்வையாளராய் பார்த்ததை எம்மால் ஏற்கமுடியாது என அனந்தி லங்காசிறி FMக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்

நவநீதம்பிள்ளைக்கு பாராட்டு தெரிவித்த ஆளும் கட்சி அமைச்சர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்த 6 விடயங்கள் தொடர்பில் அவருக்கு பாராட்டு கூறுவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
நல்லூரில் மலர் சொரிந்த ஹெலிகொப்டர் காற்றாடி பட்டு மரக்கிளை முறிந்து வீழ்ந்து பக்தர் படுகாயம்
யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழாவில் மலர் சொரிந்த ஹெலியின் காற்றாடி பட்டு மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் பக்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரட்டைக் குடியுரிமையாளர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு விமானநிலைய புலனாய்வாளர்களிடம் அரசாங்கம் வேண்டுகோள்!முக்கியமாக சுவிஸ் , கனடா ,பிரிட்டிஷ் கடவுசீட்டை  பெற்றுள்ள தமிழர்கள் மீது சந்தேகம் 
வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்களை கண்காணிக்குமாறு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கடமை புரியும் புலனாய்வு (The State Intelligence Service (SIS) officers at the BIA)  அலுவலர்களுக்கு பாதுகாப்பு அமைச்சினூடாக ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையின வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்கள் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சுங்க அதிகாரிகளிடம் கையளிக்கும் தங்குமிட முகவரி கொழும்பு முகவரியாக வழங்கப்படுவதாகவும், எனினும் அவர்கள் வேறு முகவரியில் தங்கியிருப்பதாகவும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் விமான நிலையத்தில் தரையிறங்கும் வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் விமான நிலைய வருகைக்கான (immigration arrival card)  அட்டையில் பதியப்படும் விபரங்கள் சேகரிக்கப்பட்டு புலனாய்வுப்பிரிவின் ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் இரட்டைக் குடியுரிமையாளர்கள் விமான நிலையத்தில் கொடுக்கும் முகவரியிலா தங்கியிருக்கிறார்கள் என ஒப்பிட்டு பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் புலம்பெயர் தமிழர்கள் அதிகளவில் வாக்களிக்கலாம் என அரசாங்கம் எதிர்பார்ப்பதும், இரட்டைக் குடியுரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனரா? என கண்காணிப்பதற்குமே இந்த புதிய நடைமுறை என தெரிய வருகிறது.
நவி.பிள்ளையைச் சந்தித்தவர்கள் சித்திவதைக்கு உள்ளாக்கப்படுவது குறித்து விசாரணை தேவை: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்தபோது சந்தித்த மக்களை இலங்கைப் படையினர் சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவதாக வெளியான குற்றச்சாட்டு
'இலங்கை படுகொலைகளின் மண்’ தீர்வைத் தேடி தருவேன்! நம்பிக்கை தந்த நவநீதம்பிள்ளை-விகடன் 
குற்றங்கள் நடக்கவில்லை... சொர்க்க பூமி இது என்றார் மகிந்த ராஜபக்ச. ஆனால், நவநீதம்பிள்ளையின் வருகையில் அவரே கேட்ட மக்கள் கதறல்களும் கண்ட கோரங்களும் 'இலங்கை படுகொலைகளின் மண்’ என்பதை மீண்டும் உலகத்துக்கு உணர்த்திவிட்டது.


யாழில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் பலி - தப்பியோடிய சாரதி கைது
யாழ்ப்பாணம் பலாலி வீதியின் கோண்டாவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
France

வாழ்வின் இனிய தருணங்கள் அனைவருக்கும் எளிதில் அமைவதில்லை…

வயதுவேறுபாடின்றி பார்த்தவர்கள் அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்…

எமக்கான முத்திரையுடன் உலகெங்கும் வெற்றிநடைபோடுகிறது…

இந்த அரிய சந்தர்ப்பத்ததை தவறவிடாதீர்கள்… பின்னர் கவலையடையாதீர்கள்…

Maaru Thadam in France...
15.09.2013 pm 19.30 in France
MEGA CCR EPINAY SUR SEINE


3 செப்., 2013

சிங்கள அரசு உரிமை தர மறுத்தால் 10 வயதிலிருக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆயுதம் பற்றி சிந்திப்பதை தடுக்க முடியாது: சி.சிறீதரன்
தமிழ் இனம் வடக்கு கிழக்கு எனும் சிறுபரப்பினிலே தனக்கு உரித்துடைய வாழ்வுரிமையினைக் கேட்டு நிற்கிறது. அந்த உரிமையினைக் கூட சிங்கள இனவாத அரசு தரமறுத்தால், இன்று 10 வயதுகளில் இருக்கின்ற குழந்தைகள் இன்னும் 10 வருடத்தில் ஆயுதங்கள் பற்றிச் சிந்திப்பதை
பயங்கரவாத புலனாய்வு பொலிசாரால் ஒன்றரை மணிநேரம் விசாரிக்கப்பட்டார் அரியநேத்திரன் எம் பி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் இன்று பயங்கரவாத தடுப்பு புலானாய்வுத் துறை அதிகாரிகளினால் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
வடமாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் - 2013


தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு (த.தே.கூ) வழங்கப்பட்ட மக்கள் ஆணை !

2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் த.தே.கூ விற்கு பிரமாண்டமான ஆணை ஒன்றை வழங்கினர். அந்த அரசியல் ஆணைக்கு அமையகூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டுள்ளதோடு, அந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்கு தேவையான ஒரு முதற் படியாக தற்போது வட மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்கின்றது. இம் மக்கள் ஆணையின் முக்கிய அம்சங்களை நினைவுகூர்வது இங்கு பொருத்தமானதாகும்.
தமிழர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதை இடைநிறுத்தியது சுவிஸ் 
 புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதை, சுவிஸ் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. 
 
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சுவிஸ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
 
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, சுவிஸ் சமஸ்டி குடியேற்ற பணியகம் தெரிவித்துள்ளது. 
 
கைது செய்யப்பட்டுள்ள இரண்டு தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளும் முயற்சியில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் ஈடுபட்டுள்ளதாகவும், சுவிஸ் ஊடகச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. 



நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவின் அணுகுமுறை! எதிர்பார்ப்பில் மறுமலர்ச்சியினர்!

விருதுநகரில் அண்ணா பிறந்த நாள் மாநாட்டை மறுமலர்ச்சி தி.மு.க. நடத்துகிறது. இதற்கான பந்தல் அமைக்கும் பணியினை நான்கு முறை பார்வையிட்டிருக்கிறார் வைகோ. 
தூத்துக்குடி விமானத்தில் தீப்பற்றியது! 2 எம்.எல்.ஏ.க்கள் தப்பினர்!
தூத்துக்குடியில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து அவசர அவசரமாக பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். இதில், 2 எம்எல்ஏக்கள் உட்பட 67 பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
தமிழக முதல்வரின் வீட்டுக்கருகில் சுற்றித் திரிந்த இலங்கைப் பெண்: பொலிஸார் விசாரணை
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கருகில் சுற்றித் திரிந்த இலங்கைப் பெண்ணொருவரை பாதுகாப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புலிகளின் தளபதி பால்ராஜின் உறவினர் மகசின் சிறையில் மரணம்! கொலை என மனைவி சந்தேகம்
கொழும்பு மகசின் சிறையில் இருந்து நேற்று முன்தினம் தொலைபேசியில் சகஜமாகப் பேசிய தமிழ் அரசியல் கைதி ஒருவர் இறந்துவிட்டதாக நேற்று திங்கட்கிழமை காலை தெரிவிக்கப்பட்ட தகவலால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ad

ad