தீர்வைப் பெறக்கூடிய காலத்தின் அத்திபாரமே மாகாண சபையின் வெற்றி; வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவிப்பு
சுயாதீனமாகச் சிந்தித்து எமக்கான தீர்வைப் பெறக்கூடிய காலத்தின் அத்திபாரம் தான் மாகாண சபையின் வெற்றி - இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண சபை சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்.
வவுனியாவில் நேற்று முன்தினம் சுகாதார சேவைகள் பணிமனைக்குச் சென்று அங்குள்ள உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் அங்கு தெரிவித்ததாவது:
போர், இயற்கை அழிவு காரணமாக எமது மக்கள் பல துன்பங்களை எதிர்கொண்டனர். அதன்போது அவர்களுக்கு உதவும் பொருட்டு நான் குறைந்த