நடிகர் சந்தானம் மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, ஏ.எம்.ரத்னம் வீடுகளிலும், அலுவலகங் களிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது.
சந்தானம் வீடு தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி எதிரில் இருக்கிறது. அங்கு வருமான வரி அதிகாரிகளில் ஒரு குழுவினர் சென்றனர். கேட்டை மூடிக்கொண்டு வீட்டில் அறை அறையாக சென்று சோதனை நடத்தினார்கள்.