-
2 நவ., 2013
மட்டக்களப்பில் அத்துமீறி குடியேறிய சிங்களவர்களை வெளியேற்ற நடவடிக்கை/வரலாறு திரும்புகிறது
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட காணியில் அத்துமீறி குடியேறியவர்கள் ஒருமாத காலத்துக்குள் வெளியேற வேண்டும் என்று மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆஸி. ஊடகவியலாளர்களின் கணணித் தரவுகள் இலங்கை அதிகாரிகளால் அழிப்பு
இலங்கையில் சுற்றுலா வீசாவில் வந்து கருத்தரங்கை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட அவுஸ்திரேலியாவை சேர்ந்த சர்வதேச ஊடக மையப் பணிப்பாளர் ஜெக்லின் பாக் மற்றும் ஜீன் வோர்திங்டன் ஆகியோரின் கணணிகளின் முழுமை தரவுகளும் இலங்கை அதிகாரிகளால் அழிக்கப்படடுள்ளன.
வெகு சிறப்பாக நடைபெற்ற சுவிஸ் எழுகை அமைப்பின் இரண்டாவது ஆண்டுவிழா
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் துயர்துடைக்கும் பணியில் பங்கெடுக்கும் நோக்குடன் சுவிஸ் நாட்டில் செயற்படும் ஆன்மீக, கலை, பண்பாட்டு, சமூக நிறுவனங்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட எழுகை நிறுவனத்தின் இரண்டாவது ஆண்டுவிழா
தம்புள்ள பத்திரகாளி அம்மன் ஆலயத்தை உடைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துக! ஜனாதிபதிக்கு யோகேஸ்வரன் எம்.பி. மகஜர்
தம்புள்ள தமிழ் மக்களால் 40 வருடத்துக்கு மேலாக வழிபட்டு வந்த ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தை இடித்தவர்களை அரசாங்கம் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் அவசரமாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரில் குறிப்பிட்டுள்ளார்.
அரசுடமையாக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் வழக்கு தாக்கல்!- சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசாவின் வாதத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிப்பு
பாதுகாப்பு அமைச்சின் மூலம் 2012ம் ஆண்டு அரச உடமையாக்கப்பட்டு தமிழ்நாதம் பத்திரிகை அச்சிடும் காரியாலயமாக பயன்படுத்தப்படும் காணி உரிமையாளர்கள் தமது காணி சட்டரீதியற்ற முறையில் அரச உடமையாக்கப்பட்டதை எதிர்த்து மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
1 நவ., 2013
இசைப்பிரியா வீடியோ உண்மையெனில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயந்தி நடராஜன்
தேவர் பிறந்தநாளில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த விஜயபாஸ்கருக்கு மந்திரி பதவி கிடைத்துள்ளது. விஜயபாஸ் கரின் பூர்வீகம் புதுக்கோட்டை. அவரது அப்பா அன்றைய அ.தி.மு.கவில் ஆர்.எம்.வீ. கோஷ்டியில் இருந்து சேர்மன் ஆனவர். ஆர்.எம்.வீ. சிபாரிசில் 1996-ல் அண்ணாமலை பல்கலையில் மருத்துவப்படிப் பில் சேர்ந்தார் விஜயபாஸ்கர். ஜெ.வை யாரும் நெருங்கவே பயந்த அச்சமயத்தில் அவரை பல்கலைக்கழகத்திற்கு அழைத்து
தீபாவளிப் பண்டிகை களை கட்டத் தொடங்கிவிட்டது. எங்கு பார்த்தாலும் பட்டாசுகளின் சத்தம் காதைப் பிளக்கின்றது. ஆனாலும் மக்களிடம் வழக்கமான உற்சாகம் மிஸ்.
சென்னை தி.நகர் பகுதி மிகப்பெரிய வர்த்தக சந்தை. தீபாவளி பண்டிகை என்றாலே ஒவ் வொரு வருடமும் கூட்டம் அதிகரித்து தி.நகரே அல்லோகல்லோலப்படும். ஆனால், இந்த வருடம் கடைசி 4 நாள் தவிர மற்றபடி கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது. வியாபாரமும் செம டல் என்கிறது வர்த்தக உலகம்.
""ஹலோ தலைவரே... தீபாவளியை ஜெகஜோதியா கொண்டாடுறவர் ஜெயலலிதா. ஆனா, இந்த முறை சொத்துக் குவிப்பு வழக்கு சம்பந்தமான டென்ஷன் அதிகமா இருந்ததாம்.''
""கோர்ட்டுக்கு வரமாட்டேன்னு ஜெ. பிடிவாதமா நின்றதையும், பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி முடிகவுடரோ விடமாட்டேன்னு உறுதியா இருக்காருன்னும் நம்ம நக்கீரனில்தான் விலாவாரியா எழுதியிருந்தாங்களே.''
கல்முனை மேயர் சிராஸ் பதவியிலிருந்து தூக்கப்பட்டார்! ஹக்கீம் அதிரடி நடவடிக்கை
சுழற்சி முறை இணக்கப்பாட்டையும் கட்சியின் தீர்மானத்தையும் மீறியுள்ள கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் இன்று முதல் மேயராக செயற்பட முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் மாகாண உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
வேலணை மத்திய கல்லூரியின் கல்லூரி தின விழாவும் பரிசளிப்பு விழாவும் அதிபர் திரு சி. கிருபாகரன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)