ஸ்டாலின் ஆதரவாளர்கள் திமுக கொடியேற்ற அழகிரி ஆதரவாளர்கள் எதிர்ப்பு
மதுரை திமுகவில் தென்மண்டல திமுக அமைப்புச் செயலர் மு.க.அழகிரி தரப்பினருக்கும், கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதையடுத்து, மாநகர் திமுக
சென்னையில் நடிகர் சல்மான்கான் கொடும்பாவி எரிப்பு குஜராத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தி நடிகர் சல்மான்கான் பங்கேற்றார். அப்போது அவர் நரேந்திர மோடி நல்லவர் என்றும் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் என்றும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி யளித்தார்.
மேல், தென் மாகாண சபைகளுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் திகதி அறிவிப்பு
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான வேட்பு மனுக்கள் இந்த மாதம் 30 திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை- மாலைதீவிற்கு இடையில் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்ய நடவடிக்கை
இலங்கைக்கும் மாலைதீவிற்கு இடையில் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாலைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நா .க.த.அ . பிரதமர் உருத்திரகுமரனின் அறிக்கை நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் செயல்முனைப்பை வீச்சாக்குவதற்கு, நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களின் பங்களிப்புக்கும் அப்பால் சென்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்கமாக நீடித்து நிலைக்கக்கூடிய
பதவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் கட்சியிலிருந்து வெளியேறலாம் : கேஜ்ரிவால்
பதவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறலாம் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். கட்சியின் கொள்கைகளில் இருந்து ஆம் ஆத்மி
காங்கிரசுடன் கூட்டணி இல்லை தனித்து போட்டி : மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான முன்னாள் முதல் மந்திரி மாயாவதி இன்று 58-வது பிறந்தநாள் விழா கூட்டம் தலைநகர் லக்னோவில் உள்ள ஒரு பூங்காவில் நடைபெற்றது. அப்போது பேசிய மாயாவதி பாராளுமன்ற தேர்தல் குறித்து கூறியதாவது:
நாடு முழுவதும் உள்ள தலித்துகளை நாம் ஒன்றிணைக்கவேண்டும். முஸ்லிம்கள் மற்றும் மேல்சாதி மக்களுக்கும் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கை சகோதரத்துவம் நிறைந்ததாக இருக்கவேண்டும்.
இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் அணி திரண்டுள்ளன!- சிங்கள ஊடகம்
இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் அணி திரண்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டின் பொது இலங்கைக்கு எதிராக
மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி நாளை மீண்டும் தோண்டப்படவுள்ளது
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி நாளை வியாழக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் மீண்டும் தோண்டப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சி தலைமையை விமர்சித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு கெஜ்ரிவால் பதிலடி
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி. டெல்லி அமைச்சரவையில் தனக்கு பதவி தராததற்கு எதிர்ப்பு தெரிவித்த இவர், இன்று திடீரென முதல்வர் கெஜ்ரிவாலை விமர்சனம் செய்தார்.
பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. 7 தொகுதிகளில் வெற்றி பெறும்: வைகோ
ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, தமது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் பொங்கல் திருநாளை கொண்டாடினார். காலையில் கட்சி பிரமுகர்கள், தொண்டர்களுடன் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.
கே.பாலசந்தர் இயக்கத்தில் அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, மூன்று முடிச்சு, நினைத்தாலே இனிக்கும் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பாலசந்தர் சமீபத்தில் ‘ரெட்டை சுழி’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.
மட்டக்களப்பின் சில பகுதிகளில் வெள்ள அபாயம்: மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகள் தீவிரம்
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வளிக்க கோத்தபாய திட்டம்? - என்னைக் கைது செய்தால் பின்விளைவுகளையே ஏற்படுத்தும்-அனந்தி
வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் அனந்தி சசிதரனை கைது செய்து, விடுதலைப் புலிகளின் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வுக்கு உட்படுத்த பாதுகாப்பு அமைச்சு திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸ் தலைநகரில் செந்தமிழ் வழிபாட்டுத் திருக்கோவில் ஞானலிங்கேச்சுரத்தில் தைப்பொங்கல்
தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் சுவிஸ் நாட்டின் தலைநகர் பேர்ண் மாநிலத்தில் இன்று (14. 01. 2014) அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கப்பெருமான் எழுந்தருளி அருளாட்சிபுரியும் ஞானலிங்கேச்சுரத்தில் தைப்பொங்கல்