புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2014

ஸ்டாலின் ஆதரவாளர்கள் திமுக கொடியேற்ற அழகிரி ஆதரவாளர்கள் எதிர்ப்பு
 மதுரை திமுகவில் தென்மண்டல திமுக அமைப்புச் செயலர் மு.க.அழகிரி தரப்பினருக்கும், கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதையடுத்து, மாநகர் திமுக
அமைப்பு கலைக்கப்பட்டுள்ளது. மாநகர் மாவட்டச் செயலராக இருந்த கோ.தளபதி தலைமையில் பொறுப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.


 கட்சித் தலைமையை எதிர்த்து போஸ்டர் ஒட்டியதாக முன்னாள் துணைமேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்ட அழகிரி ஆதரவாளர் 5 பேர் கட்சியிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.


 பொங்கல் திருநாளை முன்னிட்டு மு.க.அழகிரி தற்போது மதுரை சத்யசாய் நகர் பகுதியில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டோர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அவரைச் சந்தித்து வருகின்றனர். மேலும், ஜீவாநகர், கோவலன் நகர் பகுதியில் அழகிரி ஆதவாளர்கள் திமுக கொடியேற்றியுள்ளனர்.
 இந்நிலையில், திமுக பொறுப்புக்குழு சார்பில் அனைத்து வார்டுகளிலும் கொடியேற்றம் நடைபெற்றது. மு.க.அழகிரி வசிக்கும் 92-ஆவது வார்டில் ஜீவாநகர் 2-வது தெரு, கோவலன் நகர் பகுதிகளில் கொடியேற்றத்துக்கு இளைஞரணியினர் ஏற்பாடு செய்தனர். அங்கு புதன்கிழமை மாலை ஒலி பெருக்கியும் கட்டப்பட்டது.
 ஆனால், வார்டில் உள்ள கட்சியினரை கலந்தாலோசிக்காமல் கொடியேற்றக்கூடாது என மு.க.அழகிரி தரப்பினர் எதிர்த்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டாலின் ஆதரவாளர்களும் அங்கு கூடினர். இதனால் இருதரப்பினர் மோதும் சூழல் ஏற்பட்டது. தகவலறிந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விரைந்து வந்து சமரசம் பேசினர். அதன்பின் ஒலிபெருக்கி ஏதும் இன்றி அவசர அவசரமாக ஸ்டாலின் ஆதரவாளர்கள் கொடியேற்றிச் சென்றனர்.

ad

ad