விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு போராளியாக இல்லாவிட்டாலும், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறித்து விசாரணைகள் நடத்தப்படுவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர்,போர்க் காலத்தில் மட்டுமன்றி போருக்குப் பிந்திய காலகட்டத்தில் அனந்தி சசிதரனது பங்கு தொடர்பாகவும் தற்போதைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.